மேலும் 08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்
காலி சிறைச்சாலையில் மேலும் 08 கைதிகள் மூளைக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.
அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தீவிர சோதனை
மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மைலம்பாவெளியில் வாகனங்களை நிறுத்தி போதை பொருள் கடத்தல் காரர்களை தேடி பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (06) பிற்பகல் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர் இதன்போது 2186 தடை செய்யப்பட்ட சிகரட்டுக்களை…
புதுவருடத்தில் 25,000 பயணிகள் நாட்டுக்கு
இந்த வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…
மேலும் 1,135 பேர் கைது
இன்று (07) நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் 1,135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 46 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 16 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை…
மீண்டும் அதிகரித்த சீமெந்தின் விலை!
மீண்டும் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நிர்மாணத் துறை வளர்ச்சியைக் காட்டத் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறு விலைகளை உயர்த்துவது பாரதூரமான நிலை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இன்று (06) இடம்பெற்ற…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு!
தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.இன்று (6)திருகோணமலை சம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.தமிழருடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டை தாண்டி வேறு ஒரு…
இலங்கை, சிம்பாப்வே போட்டி கைவிடல்
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் சிம்பாப்வே அணி பதிலுக்கு துடுப்பாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது.போட்டியில் மழை குறுக்கிடும் போதும் சிம்பாப்வே அணி 4…
பெப்ரவரி முதல் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.புதிய உற்பத்தித் திட்டத்தின்படி, 2024…
கிம் ஜோங் உன்னின் இளைய மகளே வடகொரியாவின் அடுத்த தலைவர்..
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் இளைய புதல்வியே அவரின் அரசியல் வாரிசு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனை நடவடிக்கைகளின் போது அவருடன் அவரின் புதல்வியும் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், முதன் முதலாக வடகொரிய தேசிய புலனாய்வு சேவை இதனை அங்கீகரித்துள்ளது.…
உலகில் குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டது
குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய உலகின் 13 இடங்களில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் தயாரித்துள்ள குறைந்த செலவில் சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பட்டியலில் விடுமுறையை சிறப்பாக கழிக்க உலகின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இலங்கையில், யானைகள்…