அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக GMOA தெரிவிப்பு
வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது தொழிற்சங்கத்துடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு விடயமும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (14) காலை இடம்பெற்ற…
மின் கட்டண பட்டியல் குறித்த முடிவு
மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில், 1987 என்ற…
இந்திய பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இலங்கைக்கு தென்கிழக்கே இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
பழங்களில் இரசாயனம் கலப்பு – மக்களே அவதானம்
பூநகரிச் சந்தைகளில் பழங்களை பழுக்கவைக்க இரசாயனங்களை நேரடியாகப் பிரயோகிக்கும் வியாபாரிகளைக் கண்டுபிடித்து எச்சரித்ததோடு, பாதுகாப்பாக பழுக்க வைக்கும் முறைமை குறித்தும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவூட்டினர். பூநகரிப் பகுதியிலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் மற்றும் பழவிற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார…
வீட்டில் தாய் இல்லாத போது மாணவனின் செயல் – அதன்பின் ஏற்பட்ட விபரீதம்
பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, அவரது தாய்…
விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியம்
விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது. ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூபா 38 பில்லியன் அறவிடப்படுகிறது. எனவே, அரசதுறை…
அரச வங்கிகளின் பங்குகள் பொது மக்களுக்கு…
வங்கி அமைப்பில் மூலதன மேம்பாட்டு செயல்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் 450 பில்லியன் ரூபாய்களை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.இரண்டு அரச வங்கிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், இரண்டு பெரிய அரச வங்கிகளின் பங்குகளில் 20 வீதத்தை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு வழங்க…
விளையாட்டுத் துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகளை நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளார்.சட்டத்தரணி ஜீ.ஜி.அருள்பிரகாசம் ஊடாக…
மாணவர்களுக்கான பயண பருவச்சீட்டுக்கு 10,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
பாடசாலை, உயர்கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழில்ற்கல்வி மாணவர்களுக்கு பயண பருவச்சீட்டினை வழங்குவதற்கு ரூபா 10,500 மில்லியன் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 487,000 பாடசாலை மாணவர்களுக்கும் 7,000 உயல்கல்வி மாணவர்களுக்கும் 31,000 தொழிற்கல்வி மற்றும்தொழில்நுட்ப…
திரிபோஷா பக்கற்றுக்களை திருடிச் சென்றவர்கள் கைது… 30 வயது மதிக்கத்தக்க இருவர் வீடுகளில் வைத்து கைது
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்டியை உடைத்து 750 திரிபோஷா பக்கற்றுக்களை திருடிச் சென்ற இருவரை நேற்று (12) கைது செய்துள்ளதாக மட்டு. பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு திரிபோஷா பக்கற்றுக்கள் அனுப்பிவைக்கப்பட்டது.…