LOCAL

  • Home
  • மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!

மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் தொலைபேசி சாதனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முற்பட்டமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்வு

உலகளவில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.குறித்த காலப்பகுதியில் கொவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த…

ஒரு வருடத்திற்கு பின்னர், ஒருவர் கொரோனாவினால் மரணம்

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உறுதிப்படுத்திய கொவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று -23- பதிவாகியுள்ளது. கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார். கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட…

அச்சம் கொள்ளத் தேவையில்லை, மீண்டும் முகக்கவசம் அணியுங்கள்

நாட்டில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார். J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கோவிட் வைரஸ் திரிபு…

1,340 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (22) கைப்பற்றப்பட்டுள்ளன.வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்கள்…

அரச மாடிக்குடியிருப்புக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி…

மத்ரஸா மாணவன் மரணம் – சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு நேற்று (21) கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்…

12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இந்திய பெண் கைது

சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 05 கிலோ 500 கிராம் தங்கம் சுங்கப்…

அரச ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு!

2022 நிதியாண்டில் நிறுவனங்கள் இலாபம் ஈட்டியிருந்தால் மற்றும் குறைந்தபட்சம் 30% வரிக்குப் பிந்தைய இலாபத்தை ஈவுத்தொகையாக ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தியிருந்தால்,வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2023க்கான போனஸ் செலுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர்…

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் !

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார்.இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதற்கான நற்சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.