தீவிரமடையும் எலிக்காய்ச்சல்
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் துஷானி பெரேரா அறிவுறுத்தியுள்ளார். மேலும் , லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது.…
மசகு எண்ணெய்யின் விலை உயர்வு!
இலங்கை அரசுக்கு உரித்தான சுத்திகரிப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும் மர்பன் ரக மசகு எண்ணெய், இஸ்ரேல் – ஈரான் மோதலையடுத்து சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 66.40 அமெரிக்க டொலராக இருந்த மர்பன் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்…
“இலங்கையின் தனித்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் – பிரதமர் ஹரிணி”
சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜூன் 13 ஆம் திகதி…
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி
ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (13) ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து…
வாகனங்களை விற்பனை செய்த இருவர் கைது
வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள்…
சிவனொளிபாதமலை செல்லும் வீதிக்கு பூட்டு
கினிகத்தேன, தியகல ஊடாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து சிவனொளிபாதமலை வரையிலான பாதை அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக 10 நாட்களுக்கு மூடப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. பாலமொன்று இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதால்…
பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம்
நீர்கொழும்பு போரதோட்டை(கம்மல் தொட்டை) கடற்கரையில் (14) காலை முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சாரதியான, நீர்கொழும்பு தலுபத பகுதியைச் சேர்ந்த…
மருந்துகளுக்கு தட்டுப்பாடு
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார். மத்திய…
பெற்றோர்களின் கவனத்துக்கு….
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, காய்ச்சல், சளி, இருமல் உள்ள பிள்ளைகளை பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார். டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிக்கப்பட்…