மேலும் 987 சந்தேக நபர்கள் கைது
யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (21) காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 663 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 324 சந்தேக நபர்களும்…
யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், சாவகச்சேரி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின்…
யாழ் போதனாவில் மேலும் இரு டெங்கு மரணங்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார்.பரிசோதனையின் போது…
பயிர்ச்செய்கை பாதிப்பு குறித்த மதிப்பீடு ஆரம்பம்
நிலவிய அதிக மழை மற்றும் வௌ்ளப்பெருக்கால் பயிரிடப்பட்ட 61,000 ஏக்கர் நெற்பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதன்படி, நெல் சேத மதிப்பீடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை…
மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது!
மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி…
அஸ்வெசும திட்டம் தொடர்பில் புதிய தகவல்
அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
மௌலவிக்கு தொடரும் விளக்கமறியல்!
மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு நேற்று (18) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து…
15 மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்!
மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் சிலரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது காசாளர் பணியிடம் மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 காசாளர் பணியிடங்கள் (cash counters) பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார…
மோட்டார் சைக்களில் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!
மதுரங்குளி – விருதோடை , எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மதுரங்குளி – விருதோடையைச் சேர்ந்த கலீல் அஹ்மட் முஹம்மது எனும் 15 வயதுடைய மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார்…
சீனி மோசடி – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!
கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி…
