கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில்…
இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபங்களின்படி, தற்போது 9,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…
அஸ்வெசும பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களுடன் 3000 ரூபாய் கொடுப்பனவை ரூ 5000 உயர்த்தி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து 70 வயதை அடைந்த முதிர்ந்தோருக்காக இந்த பணம் செலுத்தப்படவுள்ளதாக அஸ்வேசும குழு குறிப்பிட்டுள்ளது…
கடலிலும் மிதக்கும் ஹோட்டல்!
களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறினார். தற்போது…
மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகள்
பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 500 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன், 40 ரயில் சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு…
போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது. 19 வயதான இந்தச் சந்தேக நபரிடம்…
புத்தாண்டை முன்னிட்டு விசேட சோதனை
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் வியாழக்கிழமை (10) காலை மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள்,அங்காடி…
மான் இறைச்சியை கடத்தியவர் கைது
கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக சிறிய வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சி கடத்தி சென்ற இருவரை வியாழக்கிழமை (10) பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூரில் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த…
இந்திய பிரஜைகள் கைது
காலாவதியான விசாக்களின் கீழ் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு நாட்டிற்குள் நுழைந்தனர், அவர்களில் 17 பேர் சுற்றுலா விசாக்களின் மூலமும், 4 பேர்…
