ACCIDENT

  • Home
  • விபத்துகளைத் தடுக்க AI தொழில்நுட்பம்

விபத்துகளைத் தடுக்க AI தொழில்நுட்பம்

இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஜிபிஎஸ் (GPS) மற்றும் சிசிரிவி (CCTV) அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போதே அமைச்சர்…

மரத்தில் மோதிய கார்

மொனராகலை , தனமல்வில – உடவலவ வீதியில் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் புதன்கிழமை (14) அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடவலவையிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க…

1842 வீதி விபத்துகள் பதிவு

ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துகள் 1842 பதிவாகியுள்ள நிலையில் அந்த வீதி விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து புதன்கிழமை (14) வரை 902 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம்…

எரிபொருள் பௌசர் கவிழ்ந்தது

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல சுற்று வீதியில் (14) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பௌசரின் உள்ளே 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்துள்ளது. எரிபொருள் பௌசர் கவிழ்ந்து…

ஹட்டனில் மற்றுமொரு விபத்து

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தியில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிக வேகத்தால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து

நுவரெலியா – கண்டி வீதியில் ரம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாறையிலிருந்து கவிழ்ந்து இன்று (14) பிற்பகல் ஏற்பட்டுள்ளது. விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் கொத்மலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள்…

இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி

நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த…

நுவரெலியாவில் மற்றுமொரு பஸ் விபத்து

நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த நான்கு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வலப்பனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா…

சவுக்கு மர காட்டுப்பகுதியில் தீப்பரவல்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்கு மரங்கள் அதிக அளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை(13) பிற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் விபத்துகள்

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பஸ்களை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இரவு நேரங்களில் தூர சேவை பயணிகள் பஸ்களை விசேட பரிசோதனைக்கு…