சீனா மீது 104% வரி விதிப்பு
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா தனது 34% வரி அதிகரிப்பை…
நாளை சர்வக்கட்சி மாநாடு
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை வியாழக்கிழமை (10) சந்திக்கவுள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரியதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு
அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த உடலில் 3 விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை…
ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கிய வீதி
காலி – கோட்டை சுவரின் அருகே உள்ள வீதியின் ஒரு பகுதி நேற்று திடீரென தாழிறங்கியுள்ளது. சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு பகுதி ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கியதால் அங்கு பதற்றமான நிyலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியை மூட…
வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
‘கலிப்சோ’ ரயில் சேவை ஆரம்பம்
‘கலிப்சோ’ எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவை, நானுஓயா மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும். இந்த சேவை, செவ்வாய்க்கிழமை (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘கலிப்சோ’ ரயில் காலை 8:10 மணிக்கு…
மண்சரிவு அபாயம்
தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவின் பண்டாஹ கிராம சேவைப் பிரிவில், மண்சரிவு காரணமாக, சுமார் 10 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. மழை காரணமாக தெரணியகலையில் இருந்து மாலிபொட பகுதிக்கு செல்லும் வீதி, செவ்வாய்க்கிழமை (08) மூடப்பட்டது. பிற்பகலில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக…
கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இறுதி அஞ்சலி செலுத்தினார். தல்துவ, நாபவலவில் உள்ள வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை (08) இரவு சென்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அன்னாரது…
வானிலை அறிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் கண்டி, கேகாலை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல காற்றின் தரம் பதிவாகியுள்ளதுடன், ஏனைய பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவுகள் பதிவாகியுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்…
