admin

  • Home
  • முன்னாள் வேந்தர் இஷ்ஹாக் மக்காவில் காலமானார்

முன்னாள் வேந்தர் இஷ்ஹாக் மக்காவில் காலமானார்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வேந்தரும், பேராசிரியருமான, நிந்தவூரைச்சேர்ந்த ஏ.எம். இஷ்ஹாக், இன்றைய தினம் (26) புனித மக்காவில் காலமானார். தனது பேரப்பிள்ளைகள் சகிதம் புனித மக்காவில் உம்ரா கடமைகளை நிறைவு செய்த கையோடு இலங்கை நேரப்படி இரவு 8.00மணிக்கு…

பாடசாலைப் பொருட்களை மலிவு விலையில்- ஹந்துன்நெத்தி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை நேற்று (25) பார்வையிடும் போது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி…

மன்மோகன் சிங் காலமானார்!

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் இன்று காலமானார். மன்மோகன் சிங் உயிரிழந்த செய்தியை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா உறுதிப்படுத்தினார்.

மின்கட்டணத் திருத்தம்!!

ஆரம்பம மின்கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கோரல் நடவடிக்கைகள் நாளை(27) முதல் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய மாகாணத்தின் பொதுமக்கள் கருத்து கோரல் நடவடிக்கைகள் கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. மின்கட்டணத்…

அஸ்வெசும நிலுவைத் தொகை நாளை!

அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கு இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதிபெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத்…

போதையில் வாகனம் செலுத்துவோரின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும்!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் இரத்து செய்யப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எனவே, மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட…

காஸாவில் ஊடகவியலாளர்கள் 5 பேர் பலி

பாலஸ்தீனம் – காஸா நிலப்பரப்பில் கடந்த 447 நாட்களுக்கும் அதிகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்தி வரும் அநியாய தாக்குதல்களில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டு சுமார் 1லட்சத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காஸாவில் இயங்கி வந்த 32 மருத்துவமனைகளையும் இஸ்ரேலிய…

மகிழ்ச்சி என்பது என்ன…?

பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவிய நண்பரான அபிதின் தினோ என்பவரிடம் ‘மகிழ்ச்சி’ என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார். ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் சித்தரித்தார். கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு,…

சுமார் 150 கோடி ரூபாய் நிதி மோசடி

சுமார் 150 கோடி ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்…!!! திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால்,…

அமெரிக்காவின் தேசிய பறவை வெண்தலைக் கழுகு!

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா்.வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்” என அழைக்கப்படுகின்றன. இந்த வெண்தலைக் கழுகு அலாஸ்கா, கனடா, வடக்கு மெக்சிகோவில் அதிகம் வசிக்கின்றன.…