யாழில் கரையொதுங்கிய திமிங்கிலம்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமே இறந்து கரையொதுங்கியது. குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில்…
வீரகெட்டியவில் சிக்கிய 110 கிலோ போதைப்பொருள்
வீரகெட்டிய, ஹத்துபொதே பகுதியில் உள்ள கருவாத்தோட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தங்காலை குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரயிலை நிறுத்திய இருவருக்கு பாராட்டு
பாணந்துறை – மொரட்டுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற ரயில் குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் மற்றும் ரயிலை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர்…
மிருகக்காட்சிசாலையில் திருடப்பட்ட கிளி!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு நடந்துள்ளதுடன், இது மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஒரு…
இலங்கையிலிருந்து சென்ற கப்பலில் பாரிய தீப்பரவல்
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைத்த இந்திய கடற்படை கப்பல்கள், தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. 12.5…
வீட்டின் முன் சடலமாக மீட்கபட்ட 22 வயது இளைஞன்
வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டின் முன்பாகவுள்ள மரத்தில்…
முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது
முச்சக்கர வண்டியொன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (08) பிற்பகல் ராகம பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையில் 9 கிராம் 480 மில்லிகிராம்…
போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
மாவத்தகம – கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மாவத்தகம – கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் மாவத்தகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது…
போதைப் பொருளுடன் இளைஞன் கைது
ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (08) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறுவையாறு பகுதியில் நள்ளிரவு 11.20 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபரின் வீட்டு வளாகத்தில்…
மித்தெனிய வீதியில் வாகன விபத்து: ஒருவர் பலி
திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில்…