இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கம்
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன…
மின்சாரம் 15 சதவீதம் அதிகரிப்பு
மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) புதன்கிழமை (11) அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12, முதல் அமலுக்கு வரும் . 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருந்தும் திருத்தப்பட்ட கட்டணங்கள்…
சட்டவிரோத கருக்கலைப்பு: பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பெண் அதீத இரத்த பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம்…
இஸ்லாம் பாட ஆலோசகராக றிஸ்வி நியமனம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) நியமனம் பெற்றுள்ளார். அவருக்கான, நியமனத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதன்கிழமை (11) அன்று கல்வி அமைச்சில்…
மன்னாரில் ஆர்ப்பாட்டம்
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து புதன்கிழமை (11) காலை ஆர்ப்பாட்டமொன்று…
பேருந்து லொறியுடன் மோதி விபத்து
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று வெல்லம்பிட்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மிதொடமுல்ல சந்திக்கும் இடையிலான வீதியோரத்தில் அமைந்துள்ள ஒரு வன்பொருள் நிறுவனத்தைச்…
யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயம்
யானை தாக்கியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து புதன்கிழமை(11) அன்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை – மாவடிச்சேனை பிரதேசத்தில்…
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (11) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரணில் இன்று CID-யில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக உள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இவர் முன்னிலையாக உள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக முன்னாள்…