Month: March 2025

  • Home
  • பவுசர் கவிழ்ந்ததில்: சாரதி பலி

பவுசர் கவிழ்ந்ததில்: சாரதி பலி

கலவான-மதுகம வீதியில் அம்பலமஹேன பகுதியில் புதன்கிழமை (26) இரவு ரப்பர் லேடக்ஸ் பவுசர் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பால் லாரியின் ஓட்டுநராக இருந்த கல்னேவ ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த…

டெங்குவை கண்டறிய ட்ரோன்

டெங்கு நுளம்பும் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் நடவடிக்கை நுகேகொடையில், வியாழக்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் மேல் மாகாண சபையும் இணைந்து மூன்று நாட்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.…

மக்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வரும் நிலையில் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய நீராகாரங்களை அதிகமாக உட்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மற்றும் குழந்தைகள்…

அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் புதன்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.…

பீடி இலைகள் சிக்கின: இருவர் கைது

மன்னாரில் இருந்து குருநாகல் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து புதன்கிழமை (26) இரவு கைப்பற்றப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி…

வர்த்தக நிலையங்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம்

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி விற்பனை நிலையத்திற்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையையும் செய்யப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய…

“கணவரை காணவில்லை” ; மனைவி முறைப்பாடு

மன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் கடந்த 23 ஆம்…

பாடசாலை மாணவர்கள் இருவரை காணவில்லை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள்…

தெய்வேந்திரமுனை துப்பாக்கிச் சூடு

மாத்தறை – தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியில் வௌ்ளிக்கிழமை (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில்…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காய்…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காயை எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெள்ளரிக்காய் கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்து உள்ள…