அஞ்சல் மூலம் வாக்களிப்பு
அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு: 01. 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல்…
யால தேசிய பூங்காவின் சில வீதிகள் மீண்டும் திறப்பு
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று (05) பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின்…
போதைப்பொருளுடன் கைதான வெளிநாட்டு பிரஜை
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமாக வாகனம் இறக்குமதி செய்தவர்கள் கைது
சட்டவிரோதமாக ஒரு SUV மற்றும் ஒரு காரை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தியதற்காக மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல பொலிஸ் அதிகாரிகள் 2024 ஒக்டோபரில் அந்தப் பகுதியில் உள்ள…
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு IMF அறிவிப்பு
இலங்கை மின்சார சபை ஜனவரி மாதத்தில் நாட்டின் மின்சாரக் கட்டணத்தை திருத்தியுள்ள போதிலும் மின்சார உற்பத்திச் செலவுகளை புதிய கட்டணத்தால் ஈடுகட்ட முடியாதென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர்…
பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விற்பனை
இலங்கையில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
பாலகனுக்கு எமனான மாத்திரை
முல்லைத்தீவு – மாங்குளம் கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் நேற்று (04) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் ,…
யாழ் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்புகள்
யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்…
பொலிஸ் பரிசோதகர் பணிஇடைநீக்கம்
மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை தனிப்பட்ட தகராறு காரணமாக, போத்தலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்…
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் , மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு குறித்த வயோதிப பெண் , கோப்பாய்…