“அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி” – கனடா
குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான அமெரிக்க…
மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் ஓட்டுநர் உயிரிழப்பு
கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உடகட வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பெண் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு (01) 8.10 மணியளவில்…
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி மொஹமட் லபார் தாஹீர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.…
தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த…
சிறைக் கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தினத்தில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை ஒவ்வொரு கைதிக்கும் போதுமான அளவில் வழங்கவும் வாய்ப்பு…
1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
பயாகல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேக நபரிடமிருந்து சுமார் 1.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருட்களையும் பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல்…
1.5 மில்லியன் கிலோ காலாவதியான உணவுகள்?
இந்நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான வெயங்கொட களஞ்சியசாலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருப்பதாகவும் அவை நுகர்வுக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. 2023 ஆம்…
வாகன பராமரிப்பு பற்றாக்குறை; விபத்துக்கள் அதிகரிப்பு?
நாடளாவிய ரீதியாக இடம்பெறும் பல்வேறு வீதி விபத்துக்களுக்கு வாகனங்களை முறையாகப் பராமரிக்காததே காரணம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார். தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, மக்கள் தங்கள் வாகனங்களை முறையாக…
மாவை மறைவு; றிஷாட் இரங்கல்
இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்த மூத்த அரசியல்வாதியும் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
உடவளவையில் கஞ்சா தோட்டம்; சந்தேக நபர் கைது
உடவளவை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுவந்த கஞ்சா தோட்டமொன்றை உடவளவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, சுமார் 4 அடி உயரம் வரை வளர்க்கப்பட்ட 2,153 கஞ்சா செடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.…