Month: February 2025

  • Home
  • நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (27) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகரே…

ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, ஜப்பான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசொமதா அகியோவால் இந்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில்…

“குற்றங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை” –  அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டில் சமீப காலங்களில் குற்றங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வியாழக்கிழமை (27) அன்று பாராளுமன்ற கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 14 குற்றச் சம்பவங்களும்,…

ஹக்கீம், பிமல் மோதல்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை நிதிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம்…

“புத்தளம் கல்லடி: 19 வயதான யுவதியின் மர்ம மரணம்”

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்பவத்தன்று, யுவதி…

இலங்கை வரவுள்ள 2வது தொகுதி வாகனங்கள்

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில், இரண்டாவது தொகுதி பயன்படுத்தப்பட்ட கார்கள் இன்று இரவு ஜப்பானில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முதல் தொகுதி நேற்று முன்தினம்(25) தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில்…

“தொழிலதிபரிடம் இருந்து தங்க நெக்லஸ்ஸை கொள்ளையடித்த அழகான யுவதி”

முகநூலில் அறிமுகமான அழகான யுவதியை சந்திக்க தொழிலதிபரை போதையில் ஆழ்த்தி விட்டு, பெறுமதியான பொருட்களை அபகரித்துக் கொண்டு யுவதி தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது. இதன்போது கிட்டத்தட்ட 2.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ்…

கிராண்ட்பாஸில் வீட்டு வாடகை தகராறு; ஒருவர் பலி

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியைச்…

நீர் விநியோகத்தில் தடை

தொடர்ந்து நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து…