அப்பிளுக்கும், மெட்டாவிற்கும் பெருந்தொகை அபராதம் விதிப்பு
அப்பிள் (Apple) மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு (Meta) ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது. அப்பிள் நிறுவனத்திற்கு 570 மில்லியன் டொலர் அபராதமும், மெட்டா நிறுவனத்திற்கு 228 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை…
மோடியை வரவேற்ற, மொஹமட் பின் சல்மான்
ஜித்தாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் இந்தியப் பிரதமர் மோடியை சவுதி பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான வரவேற்கிறார். அங்கு அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடைபெற்றது.
உலகின் முதல் தங்க ATM
சீன நிறுவனமொன்று உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம்…
உலகின் மிகப்பெரிய சர்வதேச கண்காட்சியில் இலங்கை
பல நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்ற, உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியான Word Expo கண்காட்சியில், இலங்கையின் சுற்றுலா, கலாச்சாரம், சுதேச மருத்துவம், தேயிலை மற்றும் ஆடை உள்ளிட்ட துறைகளில் இலங்கையின் அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.…
அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் விமானத்தில் தீ
அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பயணிகளுடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது.…
ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன
புனித திருத்தந்தை பிரான்சிஸை கௌரவிக்கும் வகையில், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் திங்கட்கிழமை (21) இரவு அணைக்கப்படும் என்று பிரெஞ்சு மேயர் ஆன் ஹிடால்கோ அறிவித்தார். பாரிஸில் உள்ள ஒரு இடத்திற்கு போப் பிரான்சிஸின் பெயரைச் சூட்ட நகர அதிகாரிகள்…
போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சீல்
வத்திக்கானில் உள்ள போப்பின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவில் திங்கட்கிழமை (21) மாலை ஒரு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இது கமர்லெங்கோ என்று அழைக்கப்படும். ஒரு கார்டினல், போப்பின் தனிப்பட்ட இல்லத்தை சிவப்பு நாடாவால் பூட்டி சீல் வைத்து மெழுகால் மூடும் ஒரு செயல்முறையின்…
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு விஜய் இரங்கல்
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான…
பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானார்
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், புனித பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப்…
வெடித்துச் சிதறிய விமானம்
அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில்,…