WORLD

  • Home
  • 12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்லத் தடை

12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்லத் தடை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 12 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ, இக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா,…

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய லீ ஜே-மியுங் வெற்றிப்பெற்றார். சர்ச்சைக்குரிய…

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் 2025 ஜூன் 3 ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 6.2 அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதியில், மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்தது. இதன் ஆழம் 68…

நூற்றுக் கணக்கானோர் காயம்!

பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது. ஆயிரக்கணக்கான PSG ரசிகர்கள், தலைநகர் பாரிஸின்…

உலகின் மிகப்பெரிய கூடார நகரம்

ஹஜ் யாத்ரீகர்களை (2025 ஆம் வருடம்) வரவேற்க மினா தயாராக உள்ளது. கூடாரங்களின் நகரம் என்றும் அழைக்கப்படும் மினா, ஹஜ் யாத்திரையின் போது முக்கிய பங்கு வகிப்பதால் பிரபலமான ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது சவுதி அரேபியாவின் மக்காவிலிருந்து கிழக்கே 8…

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்

காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம்…

மாதவிடாய் விடுமுறை கேட்ட மாணவி

மாதவிடாய் காரணமாக விடுமுறை கேட்ட மாணவியிடம், “நீங்கள் உண்மையில் மாதவிடாய்க்கு உள்ளாகியுள்ளீர்களா என்பதை நிரூபிக்க உடைகளை கழற்றி காட்டுங்கள்” எனக் கேட்டதாக கூறப்படுகிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திலேயேஇடம்பெற்றுள்ளது. அந்த மாணவி சமூக ஊடகத்தில்…

9 வது முறையாக தந்தையான இங்கிலாந்து முன்னாள் பிரதமர்

போரிஸ் ஜான்ஸன் கெர்ரி திருமணம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேர்ரி ஜான்சன் கருவுற்றிருந்த நிலையில் மே 21-ம் தேதி…

பிரான்ஸ் ஜனாதியின் முகத்தைப் பிடித்த பெண்

வியட்நாமுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தொடர்பான ஒரு செய்தி தற்போது ஊடகங்களில் பரவி வருகிறது. பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானம் ஹனோய் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, கதவுகள் திறக்கப்பட்டு, ஜனாதிபதி விமானத்துடன் இணைக்கப்பட்ட படிக்கட்டுகளில்…

இலங்கையர் மூவர் அல்பேனியாவில் கைது

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள்…