உணவகங்களுக்கு எதிராக வழக்கு
நோன்பு காலத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை(25) பாரிய உணவுப் பரிசோதனை நடவடிக்கை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. குறித்த…
நிர்வாகத்திற்கு எதிராக வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக புதன் கிழமை (26) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
வறட்சியால் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல பகுதிகளில் உள்ள மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுமார் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் வறட்சியான காலநிலை காணமாகப்…
தங்கத்தின் விலையில் மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று விலை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய(26) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1 ஆம் திகதி…
இலங்கையில் கால்பதிக்கும் அமெரிக்காவின் ஷெல்
அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது. இந்த நிகழ்வு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இடம்பெற்றது. அதேவேளை இலங்கையில் எரிபொருள் சந்தையில்…
சிறுநீரக புற்றுநோயாளர்களின் கழுத்தில் தெரியும் அறிகுறிகள்
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டவையாக இருக்கும். இதனால் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டாலும் அதன் அறிகுறிகள் பல பகுதிகளிலும் இருக்கும். அந்த வகையில், கழுத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கண்டால்,…
செவ்வந்தியின் உருவத்தில் இருவர்
கணேமுல்ல சஞ்ஜீவவின் (Ganemulla Sanjeeva) கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யுவதியின்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது
கட்டுநாயக்க, விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவுப் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.2 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் கைது செய்யப்பட்ட பெண்…
தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான தகவல்
பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்…
