சடலத்தை மீட்க சென்றவர் பலி
வாரியபொல ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க வாரியபொல ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆற்றில் அழுகிய நிலையில், மிதந்த சடலத்தையே அவர் பார்வையிட நீந்திச் சென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…
தரமான கல்வியை வழங்க அனைவரின் ஆதரவும் தேவை
ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 – மு.ப. 11.00…
A330- 200 ரக விமானம் புறப்பட்டது
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் புதிதாக இணைக்கப்பட்ட எயார் பஸ்A330- 200 ரக விமானம் பாரிசில் உள்ள சார்லஸ் டிகோலே விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு தற்போது இலங்கைக்குள் நுழைந்துள்ளது. விமான ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முதல் கூடுதல்…
பால் தொழிற்துறையை மேம்படுத்தும் திட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றை வினைத்திறன் மற்றும்…
மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மீனவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிதம்பரம் கணித போட்டியில் சாதனை
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான தரம் 04 மொஹமட் அஹ்சன் பாத்திமா சைமா மற்றும் தரம் 06 அப்துல் இர்ஷாத் மொஹமட் இல்ஹாம் ஆகிய இருவரும் வெற்றி பெற்று சாதனை…
செம்மணியில் இரு எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று (03) இடம்பெற்ற அகழ்வுப் பணியின்போது எலும்புக்கூடு ஒன்று முழுமையாகவும், மற்றொன்று பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன. சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த…
கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு அறிவிப்பு
கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16ஆம் திகதி நடைபெறும் என்று குறிப்பிட்டு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஜூன் 16 ஆம்…
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு
பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான(Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும்…
