யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயம்
யானை தாக்கியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து புதன்கிழமை(11) அன்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை – மாவடிச்சேனை பிரதேசத்தில்…
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று அறிவிப்பு
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (11) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பேராதனை – கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரணில் இன்று CID-யில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக உள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இவர் முன்னிலையாக உள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக முன்னாள்…
கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு
கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுவரி அதிகாரிகள் கைது
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்தியாவில் இருந்து படகு மூலம் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1200 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றை ஏற்றிச்…
விபத்திற்கு பின்னர் மீண்டும் தோன்றிய சுமேதா யானை!
கடந்த மார்ச் மாதம் மரதன்கடவல பகுதியில் நடந்த விபத்தில் சிக்கி பின்னர் காணாமல் போயிருந்த சுமேதா என்ற யானை, மின்னேரியா தேசிய பூங்காவில் உள்ள பதுபொல பகுதியில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுற்றித் திரிவதை ஒரு பார்வையாளர் தனது கையடக்க…
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்
கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.…
தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்
தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்…
10 மணிநேர நீர் வெட்டு
கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ…