EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர்
EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (ஜூன் 11) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. EPIGS’25 என்பது, கொழும்பை மையமாகக் கொண்ட ஆசிய-பசிபிக் பிராந்தியம் குறித்துக் கவனம் செலுத்தும்…
வேகமாக அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார். இந்த…
பித்தப்பை வெடித்ததில் மருத்துவர் உயிரிழந்தார்
வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஒருவர், பித்தப்பை வெடித்ததால் திடீரென உயிரிழந்ததாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையின் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணரான துமிந்த சமன் குமார என்று வத்துபிட்டிவல ஆதார…
ரணில் ரஷ்யாவுக்கு விஜயம்
ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (12) காலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி பல ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளார். பல…
சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!
இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்டமை…
76 மீனவர்கள் கடற்படையினரால் கைது
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 20 டிங்கி படகுகள் மற்றும் 76 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மே 26 முதல் ஜூன் 7 வரையான காலப்பகுதியில் கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இவர்கள்…
போதைக்கு அடிமையானோருக்கு புதிய குடியிருப்பு கட்டிடம்
போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக பேராதனையில் ஒரு புதிய குடியிருப்பு கட்டிடத்தை கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய சபை, குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத மாதிரிகளின் கீழ் போதைப்பொருட்களுக்கு அடிமையான…
ஜனாதிபதி அநுர – ஜெர்மன் ஜனாதிபதி சந்திப்பு
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் நேற்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன்,…
யாசகம் பெற்று கோடீஸ்வரியாகும் பெண்
யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பதாக ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கையில் கட்டுடன் பாடசாலைக்கு அருகில் தினமுது நின்று யாசகம் பெறுவதாக கூறப்படுகின்றது. லட்சக்கணக்கில்…
கெஹெலிய வீட்டில் பணிபுரிந்த பெண் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் இன்று (11) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களை வழங்கியதன் ஊடாக அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாகப்…