போதைப்பொருளுடன் பிடிபட்ட யுவதி
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.…
வீதியில் வீசப்பட்ட சடலம்
வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளரிடம் அந்த நபர் அதிகமாக மது அருந்தி மயக்கமடைந்ததாக தெரிவித்தனர். சிசிடிவி…
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடும்ப வைத்தியர் திட்டம்
குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கம் என்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி…
தன்னியக்க இயந்திரத்தை தாக்கிய இளைஞன்
அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, முறைப்பாட்டாளர் தரப்பான வங்கிக்கு 224,750 ரூபாயை செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார். கொழும்பில் உள்ள ஒரு…
கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு (UPDATE)
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால், மேலும் இரண்டு…
காணியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
கொச்சிக்கடை, பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (20) இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான…
வேலையற்ற பட்டதாரிகள் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் போராட்டம்…
குடித்துவிட்டு பெண்களுக்கு இடையூறு
நுவரெலியா – தலவாக்கலை பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள மிடில்டன் பகுதிக்கு செல்லும் குறுக்கு குடிபோதையில் உள்ள நபர்கள், அந்த வழியில் செல்லும் பெண்களுக்கு இடையூறு விளைவிப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் பல தடவைகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்தும் அவர்கள்…
வவுச்சர் சீட்டுகளின் காலம் நீடிப்பு; மாணவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்
பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.அதேவேளை முன்னதாக,…
வாகன இறக்குமதி விதிமுறை ; அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அனைத்து நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற…
