தேயிலை தோட்டத்திலிருந்து அரச மருந்துகள் மீட்பு
அரசாங்க மருத்துவமனையொன்றில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மருந்துகள் சனிக்கிழமை (26) மதியம் ஹட்டன் ஃப்ரூட்ஹில் தேயிலை தோட்டத்தில் கொட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியிலிருந்து ஹட்டன் ஃப்ரூட்ஹில் தோட்டத்திற்கு செல்லும் வீதியில் உள்ள தேயிலைத்…
மின்னல் தாக்கத்தில் வீடு பகுதி அளவில் சேதம்
மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்று பகுதியளவில் சேதமடைந்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு வீடொன்றே இவ்வாறு வீடு சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த…
63 மில்லியன் மதிப்புள்ள நகைகளை கடத்தியவர் கைது
துபாயிலிருந்து சுமார் ரூ.63 மில்லியன் மதிப்புள்ள இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்த முயன்ற இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஃப்ளைடுபாய்FZ 569 விமானத்தில் பயணி நாட்டிற்கு வந்துதங்கத்தை இடுப்பில்…
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட 1500 வாகனங்கள்
பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்து வரப்படுள்ளனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும். இந்த கப்பலில் நான்கு உயர் மற்றும் கனரக வாகன அலகுகள் இருந்துள்ளன.…
இன்றைய வானிலை அறிக்கை
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
ஒரே வருடத்தில் சாதாரண தரம்,உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி
கொழும்பு விசாகா வித்யாலயத்தில் கல்வி பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 2023ஆம் கல்வியாண்டிற்கான க.பொ.த.…
மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக தெரிவு!
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும்…
வெற்றியை தனதாக்கிய ரோயல் சேலஞ்சர்ஸ்
டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வெ்னற ஆர்.சி.பி. பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்…
இன்று பணி புறக்கணிப்பில் சுகாதார தரப்பினர்
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட சில…
“தரமற்ற மருந்துகள் தொடர்பில் விரிவான அறிக்கை வேண்டும்”
நாட்டில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்வதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அடிப்படைக் காரணிகள் பற்றிய தகவல்கள் உட்பட ஒரு மாதத்திற்குள் பொது நிறுவனங்கள் குழுவிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.…
