Editor 2

  • Home
  • இலஞ்சம் வாங்கிய அதிபர் 

இலஞ்சம் வாங்கிய அதிபர் 

பிள்ளையினை முதலாம் வருடத்திற்கு சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூடைகளுக்கு 18,520 ரூபா லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்…

வழமைக்கு திரும்பிய ரயில் சேவைகள்

கடந்த 3 நாட்களாக தடைப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமைப்போல இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து இயக்குநர்களுக்கு இடம்பெற்ற பரீட்சை காரணமாக, கடந்த 17 ஆம் திகதி முதல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.…

பல பகுதிகளின் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின்…

பெரும்போகத்திற்காக அரிசி இருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

எதிர்வரும் பெரும்போகத்திற்காக அரிசி இருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (19) பிற்பகல் ஹொரணை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி…

 இளம் பெண் சடலமாக மீட்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம்…

மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழப்பு

எஹலியகொட – தொரணகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றின் குளியலறையில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் நேற்று (19) எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில்…

காஸா போர் நிறுத்தத்திற்கு இலங்கை பாராட்டு

காஸா போர் நிறுத்தம் தொடர்பாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பிணைக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை காஸா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், காஸா பகுதி மக்களுக்கு மனிதாபிமான…

ஜனாதிபதியின் அடுத்த உத்தியோகபூர்வ விஜயமாக, ஐக்கிய அரபு இராச்சியம்

தனது அடுத்த உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கனவே கிடைத்துள்ளதாக களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கு நன்மை பயக்கும்…

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழப்பு

தெல்தெனிய பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவர் படகிலிருந்து வீழ்ந்து இவ்வாறு மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 62 வயதுடைய அம்பகொடே, கென்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின்…

அஸ்வேசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அதற்கமைய,…