340,000 பேருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
இந்த ஆண்டு 340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (23) நடைபெற்ற புதிதாக அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…
பார்வையற்ற சிறுமிகளை குடும்பத்துடன் உம்ரா செய்ய அழைத்துள்ள சவுதி
சவுதி அரேபியா, பார்வையற்ற 2 இலங்கைச் சிறுமிகளை தங்கள் குடும்பத்துடன் உம்ரா செய்ய அழைத்துள்ளது. அவர்கள் எப்போதோ உம்ராவைச் செய்ய விரும்பினார்கள் என்றும், ஆனால் போதுமான வளங்கள் தங்களுக்கு இல்லாமையால் வாய்ப்பு கிட்டவில்லை எனவும், சவுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது…
திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்
அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த ச்ம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. விரந்து வந்த தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ள…
பாடசாலை மாணவியை சீரழித்த ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகின்றது. சம்பவம்…
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு
நாடாளுமன்ற உணவகத்தில் உணவை பெற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் கட்டணத்தை 1,550 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சபை குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, புதிய விலைகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என அந்த குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க…
மனைவியை கொலை செய்து குக்கரில் வேகவைத்த கணவன்
இந்தியாவின் தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன், எலும்புகளை ஏரியில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. இவர் வெங்கட…
அதிக விலைக்கு அரிசி விற்பனை; எதிராக சட்ட நடவடிக்கை
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (23) கொழும்பு மாவட்டத்தில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், பொரளை, நுகேகொடை, வெள்ளவத்தை, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ, பத்தரமுல்ல, கொஹுவல, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, வெல்லம்பிட்டிய,…
சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபான நிலையம்
கிரிபத்கொட பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபான நிலையமொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, குறித்த மதுபான நிலையத்தை சோதனை செய்த விசேட அதிரடிப்படையினர் 4,000 மதுபான போத்தல்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தில் ஒரு பெண்ணின் நிலை
ஒரு முஸ்லீம் பெண் பிறந்தால், அவள் தந்தை சுவர்க்கத்தில்நுழைவதர்க்கு காரணமாகி விடுகிறாள். அவள் வளர்ந்து, ஒரு ஆணை மணந்தால் ,அவன் தன் மார்க்கத்தில்பாதியை நிறைவு செய்கின்றான். அவள் தாயாகும் போது, சுவர்க்கம் அவள் காலடியில் கிடைக்கிறது.
கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் இன்று (23) தமது வர்த்தக நிலையங்களை மூடியபடி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன் போது தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல்…
