ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்துவைத்தார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்தார். அங்கு, இந்திய அரசின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையில் மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட மாஹோ-ஓமந்தை பாதையையும் திறந்து வைத்தார்.…
இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை…
ஓட்டமாவடியில் விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதியில் சனிக்கிழமை (5) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயும் அவரது ஏழு வயது மகனும் காயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட போது பிரதான வீதியால் வேகமாக…
இராமேஸ்வரம் செல்கிறார் மோடி
இந்திய பிரதமர் மோடி இன்று இராமேஸ்வரம் செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு இராமநாதசுவாமி கோயில் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி…
கணவர் சிறையில்: மனைவி உயிருடன் வந்ததால் பரபரப்பு
மனைவியை கொன்றதாக கணவர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மனைவி உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் வழக்கை விசாரிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குஷால் நகரை சேர்ந்தவர் குருபர…
மியன்மாருக்கு உணவுப் பொருள்களை வழங்கிய இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 442 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியன்மாரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு…
மோடிக்கு-சஜித் கொடுத்த புலி படம்
வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த “ஐ-ஒன்” (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோடிக்கு கொழும்பில் வைத்து 2025 ஏப்ரல் 5ஆம் திகதி வழங்குவது பெரும் கௌரவமாகும்.…
விழா மண்டபத்தில் ஏற்பட்ட தீ
தெருவில் உள்ள ஒரு விழா மண்டபத்தில், சனிக்கிழமை (05) ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது, அனைத்து வருகையாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்புத் துறை நான்கு தீயணைப்பு…
தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 41 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சென்னை…
டிக்டாக் செயலிக்கு மேலும் கால அவகாசம் வழங்கிய டிரம்ப்
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு…
