Editor 2

  • Home
  • நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மொரகொட பொலிஸ் பிரிவின் முரியாகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று (30) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளான். மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்

பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட நெதுச தத்சர பெர்னாண்டோ என்ற 3 வயது சிறுவன் பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளான். (30) சிறுவனின் சித்தியின் மகளுக்கு காது குத்தும் நிகழ்விற்காக மாலமுல்ல பகுதியில் உள்ள விகாரை…

முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று (30) நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, அந்தப் பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (31) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட உள்ளது.

வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி

எஹெலியகொட – நெந்துரன சந்தியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் நேற்று (30) இரவு மூன்று பேர் மீது குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் இத்தமல்கொட,…

ஐஸ், ஹெரோயினுடன் இளைஞன் கைது

சுன்னாகம் பகுதியில் 5 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு…

போதைப்பொருள் கடத்தல்காரரை சுட்டுப் பிடித்த பொலிஸார்

வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, வெல்லவாய நகருக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின் போது, வெல்லவாய பிரதேசத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ‘மஹவெலேமுல்லே ஷான்…

பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார…

3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், உடற்கூற்று பரிசோதனை குறித்த குழந்தை…

உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பேன் : ஜனாதிபதி

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். கல்கிரியாகம, பஹமினியாகம…

தடை செய்யப்பட்ட அமைப்புகள்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி…