மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன் எதிர்பார்த்த மீன் பிடி இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.…
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது. ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று (19) வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது…
கேன்களில் எரிபொருட்கள் வழங்கத்தடை
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை…
நீதிமன்றத் தலைவர், நீதியரசர்கள் பதவியேற்பு
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவரும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும் பதவியேற்றுக்கொண்டனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் வியாழக்கிழமை (19)…
இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்
ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் நான்கு இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.…
கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 ஒக்டோபா் முதல் பயணிகள்…
விமான சேவையை குறைக்கும் Air India
சர்வதேச விமான சேவையை சில நாட்களுக்கு 15 சதவீதம் வரை குறைக்க இருப்பதாக இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த…
இலங்கையில் எலான் மஸ்க்கின் இணையச் சேவை
இலங்கையில் எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் சேவைகளை வழங்கவுள்ளது. இது இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடு முழுவதும்…
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை விமர்சித்துள்ள ரணில்
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்புக்காக நியாயப்படுத்தும் சமீபத்திய G7 அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விமர்சித்துள்ளார், இந்த தாக்குதல் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகளின் போது நடந்ததாகவும், அதை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த…
இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்வது, நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் – ரஷ்யா
இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக இராணுவ உதவி செய்வது, மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க இராணுவ உதவி வழங்குவது மத்திய…