Month: May 2025

  • Home
  • ஒரே நாளில் 475 பேர் கைது

ஒரே நாளில் 475 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (23) பொ மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158…

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் CCTV

நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்…

மீண்டுமொரு பேருந்து விபத்து!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இன்று (24) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர்…

ஆயுர்வேத மருந்து என போதைப்பொருள் விற்பனை

திருகோணமலை கந்தளாய் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்க ளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கந்தளாய் நகரில் இயங்கி வந்த ஆயுர்வேத மருந்தகத்தின் மூலமாகவே…

கொரோனாவால் இருவர் உயிரிழப்பு!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றால் கேரளாவில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களில் கேரள…

சிறுமி துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை

ஏழு வயது சிறுமியை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயதுடைய ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன…

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமலில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மே 22 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான…

நாடு முழுவதும் 500 ஹைலேண்ட் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன

மில்கோ (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஹைலெண்ட் உற்பத்திகளை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (22) கமனல கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன…

இலங்கையில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம்

இலங்கையில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை (24) வழங்கப்படவுள்ளன. இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில்…