பண்டிகைக் கால விபத்துகளால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் வெளியான தகவல்
புது வருடப் பிறப்புடன் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்,…
ஆறு வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன்…
யானை மீது மோதிய மோட்டார் சைக்கிள்
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நண்பன் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28…
பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை
மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (14) அதிகாலை நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த…
புத்தாண்டு தினத்தில் சடலத்துடன் போராடிய உறவினர்கள்
வவுனியா வைத்தியசாலையில் , பிரேத அறையின் குளிரூட்டி பழுதால் சடலத்துடன் உறவினர்கள் போராடிய சம்பவம் ஒன்று புத்தாண்டு தினமான சேற்று அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்…
லொறியில் சிக்கி குழந்தை பலி
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை குழந்தையின் தந்தை பின்னோக்கி இயக்கிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. விபத்தில்…
பேருந்துடன் ராணுவ லொரி மோதி ஓட்டுனர் பலி
அக்பர்புர பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு பேருந்தும் ராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லையில் இருந்து வந்த பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த இராணுவ…
அதிவேக வீதியில் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் (14) கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து…
போதைப்பொருட்களுடன் மூவர் கைது
பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் மறைத்து குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க மேலதிக இயக்குநரும் ஊடகத் தொடர்பாளருமான சிவலி அருகோட தெரிவித்தார். சந்தேக நபர்கள் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்…