கணேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிதாரி தொடர்பில் புதிய தகவல் (UPDATE)
பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிசம்பர் 13, 2024 அன்று கந்தானையில் உள்ள ஒரு…
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் மார்ச் 20
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல்…
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய புதிய விலை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஜெயதிஸ்ஸ, அந்த சூத்திரம் இப்போது அமலில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். விநியோகஸ்தர்கள்…
மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டம்
மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (04) காலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபான சாலைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
தமிழ் எம்பியால் நாடாளுமன்ற அமர்வில் சலசலப்பு
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என தெரிவித்து அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் . மட்டக்களப்பில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்…
இலங்கை குறித்து IMF வௌியிட்ட தகவல்
இலங்கை மக்கள் எதிர்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறாத சூழல் உருவாகும் எனவும்,இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் வசதியின் மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்…
இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதி – வைஸ் மார்ஷல் லசித சுமனவீர
இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஏர் வைஸ்…
மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (03) இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய இராச்சியத்துடன் கனடா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த…
குளியாப்பிட்டியில் துப்பாக்கி சூடு
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில்…
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு 3% வழங்க ஒப்புதல்
சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் லிட்டருக்கு 3% தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த தள்ளுபடியை வழங்குவதில் சிக்கல் இருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.