போதைப்பொருளுடன் சிக்கிய பட்டதாரி மாணவி
பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று (09) இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…
நிதி மோசடிக்காக பெண் கைது
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைவாக சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (09) பிற்பகல் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கைது…
சடலமாக மீட்கப்பட்ட பெண்:
மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிரிகல பிரதேசத்தில் நேற்று (09) காலை பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார்…
வெளிநாட்டு தூதரகங்களில் நிலுவையிலுள்ள கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்
புதிய கடவுச்சீட்டுக்காக 26,000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களால் பெறப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் கடந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிலரின்…
சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது
பேராதனை பொலிஸார் காட்டு விலங்குகளை வேட்டையாடியதற்காக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களுடன் ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (09) காலை விலங்குகளை வேட்டையாடுவதற்காக யஹலதென்ன பிரதேசத்திற்கு சென்ற போது அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு,…
சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய முத்தையா முரளிதரன்
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனமான சிலோன் பெவரேஜஸுக்கு 25 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சர்ச்சையை எதிர்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாப்பை ஒட்டிய கத்துவா மாவட்டத்தில் உள்ள…
பாடகர் Aloe Blacc இலங்கையில்..
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக் ( Aloe Blacc), இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார். இலங்கையில் சுகாதார துறையில் முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன்…
பாவனைக்குதவாத தேங்காய் எண்ணெய்யுடன் இருவர் கைது
மனித பாவனைக்குதவாத 15,620 லீற்றர் தேங்காய் எண்ணெய்யுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மின்னேரியா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக…
கோர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழப்பு
மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே, நேற்று (09) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார்…