தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்!
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். கடந்த…
பங்குச் சந்தைக்கு புதன்கிழமை அரை நாள் விடுமுறை
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை பங்குச் சந்தை நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.ஏப்ரல் 13 ஆம் திகதி தமிழ், சிங்கள புத்தாண்டு என்பதால் பங்குச் சந்தைக்கு அரை…
ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தற்போது கொழும்பில் ஒன்றுகூடியுள்ளனர்.இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டார்.சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல்…
மே மாதம் முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்!
2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, அதன்படி மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல்…
ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரராக கமிந்து
ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அயர்லாந்தின் Mark Ader மற்றும் நியூசிலாந்தின் Matt Henry ஆகியோரும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து
நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.இதற்கமைய நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்வுகள் யாவும் ‘நிலையற்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நியூசிலாந்து…
கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நிர்மானப்…
கணவன், மனைவியருக்கு மகிழ்ச்சியான தகவல்
கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது மனைவிக்கு கணவன் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினூடாக…
காசாவில் நடந்த இரத்தக்களரியால் பிரிட்டன் அதிர்ச்சியடைந்துள்ளது – ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: “காசாவில் நடந்த இரத்தக்களரியால் பிரிட்டன் அதிர்ச்சியடைந்துள்ளது மற்றும் இந்த பயங்கரமான போரை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. காசாவின் குழந்தைகளுக்கு உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் அவசரத் தேவையாக உள்ளது, இது நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு…