சமுர்த்தி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக…
217 முறை கொவிட்-19 தடுப்பூசி பெற்ற நபர்!
ஜேர்மனியில் 62 வயதான ஒருவருக்கு மருத்துவ ஆலோசனையை மீறி 217 முறை கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளனர்.இந்த சம்பவம் “The Lancet Infectious Diseases” என்ற இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசி டோஸ்கள் தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய்யப்பட்டு…
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டம் விரைவில்
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு…
அலி சப்ரி ரஹீமுக்கு பிறக்கப்பட்டுள்ள தடை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏராளமான தங்கம் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டு பின்னர் அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்புனர் அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க இடைக்கால தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவைத் தலைவர் அமைச்சர் சுசில்…
தர்பூசணி செய்கை மூலம், கோடிஸ்வராக மாறிய விவசாயி
அனுராதபுரத்தில் தர்பூசணி செய்கை மூலம் விவசாயி ஒருவர் கோடிஸ்வராக மாறிய சம்பவம் பதிவாகி உள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கர் தர்பூசணி செய்கையின் மூலம் 60 நாட்களில் 40 லட்சம் ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளார். ஊறாகோட்டே பகுதியை சேர்ந்த 39…
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, புகையிரத சாரதிகள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ்…
மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை!
தமது கட்சி ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (05) காலை நாடு திரும்பிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்…
இறைச்சிக் கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேக நபர் கைது
கடந்த ஓகஸ்ட் மாதம் கந்தானை பிரதேசத்தில் இறைச்சி கடை உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், ரி…
வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (04) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். களவாஞ்சிகுடி – குருமன்வெளி வீதியில் எருவில் காயல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்…
ஜனவரியில் ஏற்றுமதி வருமானம் 970 மில்லியன் அமெரிக்க டொலர்
2024 ஜனவரியில் ஏற்றுமதி மூலம் இலங்கையின் வருமானம் 970.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 0.77% சரிவைக் குறிக்கிறது என்று ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 2023 உடன் ஒப்பிடுகையில், விவசாய…