தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண்…
இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.…
உலக முடிவு சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரு நடைபாதை
நுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் சமவெளியில் அமைந்துள்ள ‘உலக முடிவு’ சுற்றுலா தலத்துக்கு செல்ல மேலும் இரண்டு நடைபாதைகளை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைபாதைகள் பார்வையாளர்களுக்கு மிகவும் அற்புதமான இயற்கை காட்சிகளை தர உள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற…
கிளிநொச்சி வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் பெண்நோய்யியல் மற்றும் மகப்பேற்று வைத்திய…
உச்சம் தொட்ட பச்சைமிளகாய் விலை
ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை மீண்டும் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1,000 ரூபாயாக அதிகரித்திருந்தாலும், தம்புள்ளை பொருளாதார மையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 500 முதல் 600 ரூபாய்…
சிறைச்சாலை உயர் அதிகாரிகள் கொழும்புக்கு வருகை
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று (23) காலை நீதி அமைச்சரின் தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக…
சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கலபட பகுதிக்கும் வட்டவளை பகுதிக்கும் இடையில் ரயில் பாதையில் நேற்று இரவு 07 மணியளவில் மரமொன்று வீழ்ந்துள்ளது. இதன்போது அவ்வழியே பயணித்த ரயில் சாரதி ரயில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்துள்ளதை அவதானித்த நிலையில் சாமர்த்தியமாக ரயிலை…
சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் கைதான நபர்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 5,000 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) இரவு…
தொழிலுக்காக வௌிநாடுகளுக்கு செல்வோருக்கு விசேட அறிவிப்பு
சுயாதீனமாக வேலை தேடும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டில் சுயாதீனமாக வேலை தேட…
சபாநாயகர் தலைமையில்; மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி நெலும் பியசவில் (22) நடைபெற்றது. உயர்தரப் பரீட்சையில்,…