LOCAL

  • Home
  • இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் புபுது சூலசிறி கூறினார்.…

தீப்பிடித்து கருகிய ஓட்டோ

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ,இன்று (23) தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியில் முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது. ஹட்டனில்…

உச்சத்தை தொட்டது உப்பு விலை

சமீப சில நாட்களாக சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளது. அவற்றுக்கான தட்டுப்பாடும் கிராக்கியும் அதிகரித்துள்ளது. இதனால் அன்றாட சீவனோபாயத்தைக் கழிக்க முடியாமல் பல நடுத்தரக் குடும்பங்கள் அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் பொருட்களின் அசுர…

சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இருவர் கைது

தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது. இதன்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 8 கிலோ 960 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.…

12 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

ஒலுவில் பிரதேசத்தில் நீர் குட்டை ஒன்றில் குளிக்கச் சென்ற, ஒலுவில் 04 ம் பிரிவைச் சேர்ந்த, 12 வயது எவ்.பாத்திமா ஹிக்மா நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள நீர் குட்டையில் செவ்வாய்க்கிழமை (22)…

கட்டுப்படுத்தப்பட்ட சிறைச்சாலை பதற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர்ப்புகைத்…

தேர்தலுக்கு இ-சேவை

தபால் மூலம் வாக்களித்துள்ள வாக்காளர்கள், தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி மற்றும் சான்றளிக்கும் அதிகாரியைக் கண்டறிய உதவுவதற்காக ஒரு ‘இ-சேவை’ வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைக் குழுவின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, அந்தந்த குழுக்கள்,…

நீர் குழியில் இருந்து சிறுவனின் ஜனாஸா

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து உயிரிழந்த நிலையில்மீட்கப்பட்ட சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தையில் செவ்வாய்க்கிழமை(22) மாலை இடம்பெற்றுள்ளது. மூன்று வயதுடைய முஹம்மத் லுக்மான் என்ற சிறுவனே…

கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை

கொரியக் குடியரசின் நாசகார கப்பலான ‘காங் காம் சான்’ (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று இலங்கைக்கு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வ வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் பாதுகாப்பு…

விவசாயிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமென சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதற்கான மருந்துகளை பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளை பெற்றுக்…