LOCAL

  • Home
  • கண்டி தேசிய மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கு 1,500 மில்லியன்

கண்டி தேசிய மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கு 1,500 மில்லியன்

கண்டி தேசிய மருத்துவமனையின் 04 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கண்டி தேசிய மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள பல…

ஹொரணை தொழிற்சாலையில் தீ

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி – வியட்நாம் பிரதிப் பிரதமர் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு வியட்நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான்…

நாளை காதலர் தினம் – பெற்றோர்களே அவதானம்

உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து…

ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி கடந்த 9ஆம் திகதி தனது 62ஆவது வயதில் காலமானார். அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று யாழ்.…

6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ரிதியாகம சபாரி பூங்காவில் புதிதாக பிறந்த சிங்கக்குட்டிகளுக்கு நேற்று (12) உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. லாரா மற்றும் டோரா ஆகிய சிங்கங்களுக்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன குறித்த சிங்கக்குட்டிகளுக்கு பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 4,000 பெயர்களில் இருந்து…

காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் இளைஞன் உயிர்மாய்ப்பு

காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்

ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்களை வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். தெஹிவளை, களனி மற்றும் தலுகம பகுதிகளில் சுற்றித் திரிவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, நேற்று (12) நடத்தப்பட்ட சோதனையின் போது ​ஒரே பதிவு…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அறிமுகமாகும் யானா!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அறிமுகமாகும் யானா! வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ‘யானா’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. www.srilankan.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து இந்த வசதியைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கிறது. வலைத்தளத்தின் வலது…

68 கோடி ரூபாவை மோசடி செய்த கும்பல்

இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றின் வர்த்தக இலட்சினையை பயன்படுத்தி அதனூடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரமிட் திட்டம் ஒன்றை இயக்கி சமூக ஊடகங்கள் வாயிலாக 68 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு…