இலங்கையின் தளராத ஒத்துழைப்பிற்கு நன்றிகூறிய சவூதி அரேபியா
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்ஃபிக் அல்-ரபியா, சவுதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை ரியாதிலுள்ள ஹஜ் அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார். இவ்விஜயத்தின் போது, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்…
பாடசாலை மாணவர்களுக்கு விசேட உதவித் தொகை!
அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் விசேட காரணங்களுக்காக சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்காக பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில், பிரதமரால்…
உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பரீட்சைக்கு இடையூறு…
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.
முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு விடப்பட்டது.முத்தையன்கட்டு நீர்த்தேக்கம் உட்பட பல குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் காட்டுப்பகுதிகள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.சிறுத்தை வீட்டுக்குள் இருப்பதைக் கண்ட…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் அக்கரைப்பற்றில் காலமானார்.வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர் , இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமாவார்
உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும்…
நவம்பர் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் வருகை
நவம்பர் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை பதிவு செய்துள்ளது. நவம்பர் 2024 இல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 150,000 ஐத் தாண்டியது, இது சுற்றுலாத் துறையில் நிலையான மீட்சியைக் காட்டுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, நாளை நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…
அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டும்-ஜனாதிபதி
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன், உள்ளூராட்சி நிறுவனங்களை பலப்படுத்தி அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு…
கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை விடுமுறை – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் இன்று மற்றும் நாளை (26/27) ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர்…