இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கைது
அம்பாறை நகரில் நேற்றைய தினம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மணல் போக்குவரத்தை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்வதற்கு அம்பாறையைச் சேர்ந்த வர்த்தகரொருவரிடம் 25,000 ரூபாயை இலஞ்சமாக பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த…
காற்று பலூன் நடுவானில் தீப்பிடித்து விபத்து
பிரேசிலில் சுமார் 22 பேரை ஏற்றிச்சென்ற சூடான காற்று பலூன் நடுவானில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 8 பேர் இறந்து 13 பேர் காயமடைந்தனர். சிலர் குதிப்பதை நீங்கள் காணலாம், அவர்கள் இறந்தனர். எஞ்சியவர்கள் உயிர் பிழைத்தனர்.
ஆசிரியர் பற்றாக்குறை – டிஜிட்டல் கற்றலை அறிமுகம்
சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற…
போதைப்பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம்…
ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. 2023/2024 க.பொ.த…
ஈரான் தொடர் தாக்குதல்
ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி…
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு…
யாசகம் பெற்ற சிறுவர்கள் மீட்பு
யாசகம் பெற்ற மற்றும் வீதியோரங்களில் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் யாசகம் பெறுதல் மற்றும் பொருள்களை விற்பனை…
அமைதி இல்லையேல் அழிவு: ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும்,…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் ;சோனியா காந்தி
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக `தி இந்து’ நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில்…
