Editor 2

  • Home
  • மோட்டர் சைக்கிள் மீது கார் மோதி விபத்து

மோட்டர் சைக்கிள் மீது கார் மோதி விபத்து

கம்பளை – கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் கம்பளை, கிராஉல்ல பகுதியைச் சேர்ந்த மதுர கீர்த்தி குணசேகர (58 வயது)…

பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த பெண் (UPDATE)

மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க (22) உத்தரவிட்டுள்ளார். 32 வயதான குறித்த…

பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்!

2025 ஆம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு…

உயிருக்கு போராடும் இரு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சம்பவம் (22) மாலை இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக…

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்…

இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது

500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக…

ஜனாதிபதிக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள்…

வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது

வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டி சுதுஹும்பொல பகுதியில் வைத்து…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த…

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அறியணுமா?

பொதுவாகவே நாம் ஒவ்வொரு நாளையும் கடப்பதற்கு நிச்சயம் மற்ற மனிதர்களின் துணையை நாட வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றோம். நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரையில் ஒவ்வொரு வேலையிலும் நேரடியாகவே மறைமுகமாகவோ மற்ற நபர்களின்…