Editor 2

  • Home
  • சிறைச்சாலையில் மோதல்

சிறைச்சாலையில் மோதல்

காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார். இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்…

விஜய்யின் 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (26) வெளியானது.

ரயில் தடம்புரள்வு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி இன்று (26) மாலை 4 மணியளவில் தடம் புரள்வுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்போது ரயிலின் தடம்புரள்வை…

கடற்படையினருக்கு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனர்த்த முகாமைத்துவ பிரிவு…

அரச சேவை பலப்படுத்தப்படும்

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல்…

ரயில் பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்றவர் கைது

ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று (26) கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல, பதுளை, பண்டாரவளை போன்ற சுற்றுலா பிரதேசங்களுக்கான விசேட சுற்றுலா…

24 ஆயிரத்தை கடந்த சுற்றிவளைப்புக்கள்

2024 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகார சபை 24,761 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளது. இதன்போது 23,953 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் முடிக்கப்பட்ட வழக்குகளுக்கு நீதவான் நீதிமன்றங்கங்களால் 207 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை தாக்கல் செய்யப்படாத சோதனைகளுக்கு…

மோசமான வானிலையால், 92,471 பேர் பாதிப்பு

கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில்…

உடைந்து விழுந்த மின்சார தூண்

மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் ஒன்று உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஊழியர்கள்…

இன்றைய வானிலை அறிக்கை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு…