நாட்டின் வானிலையில் மாற்றம்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளையிலிருந்து (28ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு…
உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்
இந்நாட்டில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான…
திபெத்தில் நிலநடுக்கம்
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த 7ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும்…
வாகன இறக்குமதி தொடர்பில் அறிவித்தல்
வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச்…
ஈ-டிக்கெட் மோசடியில் கைதானவருக்கு பிணை
ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஈ-டிக்கெட்டுகளை ஒன்லைனில் சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் கண்டி குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு…
மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்
திருகோணமலை கந்தளாய் பகுதியில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட தாயொருவர் இயற்கையான பிரசவத்துக்கு உட்படுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குறித்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கந்தளாய், கெமுனு…
அரச சேவையில் 30,000 காலியிடங்கள்
இலங்கை அரச சேவையில் 30,000 அத்தியாவசிய காலியிடங்கள் நிரப்பப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (26) அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது அவசரமாக…
மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சகோதரர்கள்
கண்டி தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கண்டி தேசிய வைத்தியசாலையின்…
கணவனால் மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் குடும்பச் சண்டையின்போது கணவன் கடித்துக் குதறவே, மனைவியின் உதட்டிலிருந்து நிற்காமல் ரத்தம் கொட்டியதால் மருத்துவர்கள் 16 தையல்கள் போட்டு உதட்டை ஒட்டவைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகிலுள்ள நக்லா புச்சான் எனும்…
சிங்கள யுவதியை காதலித்த தமிழ் இளைஞன்
சிங்கள யுவதியை காதலித்த தமிழ் இளைஞனின் தந்தையை யுவதியின் தாத்தா கொலை செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (26) இடம் பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
