வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்
கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு மதியம் 12 மணி வரை மட்டுமே இடம்பெறும் என என்றும் குடிவரவு மற்றும்…
3 நாட்களில் 600 மில்லியன் வருமானத்தை ஈட்டிய CTB
பண்டிகைக் காலத்தின் மூன்று நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மட்டும் 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளனர். இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர்…
பண்டிகைக் கால விபத்துகளால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் வெளியான தகவல்
புது வருடப் பிறப்புடன் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்,…
ஆறு வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன்…
யானை மீது மோதிய மோட்டார் சைக்கிள்
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நண்பன் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28…
பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை
மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (14) அதிகாலை நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த…
புத்தாண்டு தினத்தில் சடலத்துடன் போராடிய உறவினர்கள்
வவுனியா வைத்தியசாலையில் , பிரேத அறையின் குளிரூட்டி பழுதால் சடலத்துடன் உறவினர்கள் போராடிய சம்பவம் ஒன்று புத்தாண்டு தினமான சேற்று அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்…
லொறியில் சிக்கி குழந்தை பலி
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை குழந்தையின் தந்தை பின்னோக்கி இயக்கிய போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. விபத்தில்…
பேருந்துடன் ராணுவ லொரி மோதி ஓட்டுனர் பலி
அக்பர்புர பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு பேருந்தும் ராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லையில் இருந்து வந்த பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த இராணுவ…
