மத்திய வங்கி ஆளுநர் வௌியிட்ட விடயம்
இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இலங்கையில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 2025 புத்தாண்டுக்கான கொள்கை தொடர் வெளியீட்டு விழாவில் இன்று (08) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் OPEC உறுப்பு நாடுகள் தங்கள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.37 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.…
இளைஞர் மீது தாக்குதல் – 03 பேர் கைது
யாழ். நகரில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்கள் என கருதப்படும் மூவர்நேற்று (07) கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த குறித்த நபர்கள் யாழ். நகரில் நடமாடுவதாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு…
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சட்டவிரோத குடியேற்றவாசிகள் வருகை குறித்து…
கடவுச்சீட்டு அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க – ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சபையில் நேற்று (7) கோரிக்கை விடுத்தார். கொழும்பு மற்றும் வடக்கு,…
இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஆரம்பமானது
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது. சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA)…
முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனை
மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்…
மாரடைப்பால் மரணமடைந்த மாணவி
இந்தியா – கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார்…
நண்பரின் பாதத்தை வெட்டித் துண்டாடிய நபர்
பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து தனது நண்பரின் பாதத்தை வெட்டி துண்டாடியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தை சேர்ந்த 42…
போலி குறுஞ்செய்திகலை பரப்புவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள்…
