புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகளின் தொழில் கோரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு
தொழில் கோரும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…
எரிவாயுவின் விலையில் மாற்றம் இருக்காது
அடுத்த சில ஆண்டுகளில் உலக சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று உலக லிட்ரோ எரிவாயு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை மெட்ரிக் தொன்னுக்கு 600, 700 மற்றும் 800 அமெரிக்க டொலர்களுக்கு இடையில்…
இன்றைய வானிலை அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை 12 ஆம் திகதி நாளையும் தொடரும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா , இன்றுடன் ஒப்பிடும்போது நாளை சற்று குறைவாகவே…
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது வன்முறைச் சம்பவங்கள்…
தங்கத்தின் விலை வீழ்ச்சி
நாட்டில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலையானது இன்று குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்றையதினம் (11) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 857,968 ரூபாவாக…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை சைக்கிளோட்டி சாதனை!
கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதி யாழ்ப்பாணம் புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியின் மூலம் மூன்றே நாட்களில் சென்றடைந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா என்பவரே இந்த சாதனை படைத்துள்ளார்.யாழ்ப்பாணம் – புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற்…
அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை
உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, உலகில்…
இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை
இன்று (11) நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை…
இலங்கை வந்த நடிகை கீர்த்தி சுரேக்ஷ்
தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (11) அன்று இலங்கை வந்தடைந்தார்.இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கீர்த்தி சுரேஷூக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.