Month: February 2025

  • Home
  • உப்பு இறக்குமதி மேலும் தாமதம்

உப்பு இறக்குமதி மேலும் தாமதம்

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக…

பேருந்து சாரதி மீது வாள்வெட்டு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பேருத்தில் பயணிகள் நடுவீதியில் நிர்க்கதிக்குள்ளாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற…

முகம்மது சாலி நழீம் எம்.பி மீது தாக்குதல்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் காயமடைந்து ஏறாவூர்…

சகல விக்கெட்டுக்களையும் இழந்து 414 ஓட்டங்களை பெற்ற அவுஸ்திரேலிய அணி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 414 ஓட்டங்களை பெற்றுள்ளது.…

கிரிஷ் கட்டிட தீ விபத்துக்கான காரணம் (UPDATE)

கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ‘கிரிஷ்’ கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கட்டிடத்தின் இரும்பு பாகங்களை பாதுகாப்பற்ற…

சீனாவில் ஆரம்பமான குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்

9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் நேற்று இரவு (7) சீனாவில் ஆரம்பமாகியது. அதன்படி, இம்முறை போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழா வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின்…

சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், சாரதி செய்த காரியம்

வவுனியாவில் க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக உதிரிப் பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று (07) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தினால்…

நுவரெலியாவில் உறைபனி பெய்ய வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய…

E-8 விசா வேலைவாய்ப்பு குறித்து வௌியான அறிவிப்பு

தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. E-8 தொழில் பிரிவின் கீழ்…

ரவியின் முன்மொழிவு தொடர்பில் பிரதமர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வது தொடர்பான தனிநபர் முன்மொழிவை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (07) பாராளுமன்றத்தில்…