கோதுமை மாவின் விலை குறைப்பு
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த விலைக் குறைப்பு நாளை (18) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் மிதிபலகையில் நின்றவர் விழுந்து உயிரிழப்பு
கொழும்பு – இரத்தினபுரி வீதியில் தானாயம சந்திக்கு அருகில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணித்தது. இதன்…
பிள்ளைகளை தவிக்க விட்டு தாயார் மாயம்
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை(10) முதல் காணாமல் சென்றுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…
கைப்பற்றபட்ட பெருந்தொகை கஞ்சா செடிகள்
அம்பாந்தோட்டை, தம்மென்னாவ வனப்பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா செடிகள்…
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
வரவு செலவுத் திட்டம்; முதியோர் கொடுப்பனவும் அதிகரிப்பு!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதியோர் கொடுப்பனவும் 5000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த உதவித்தொகை 7500 முதல்…
நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு
யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் , வரவு செலவுத்…
வட மாகாணத்திற்கும் அதிக நிதி ஒதுக்கிய ஜனாதிபதி
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள், பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதோடு வட்டுவாகல் பால கட்டுமான ஆரம்பிப்புக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென ஜனாதிபதி…
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2 200 பில்லியன்
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது அதன்படி, வரவு செலவுத்…
கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்ட இவர்,…