இலங்கையில் புதிய வகை பெற்றோல் அறிமுகம்
லங்கா ஐஓசி நிறுவனம் புதிதாக 100 ஒக்டேன் ரக பெற்றோலை இன்று (02) சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று லிற்றோ விலை குறைக்கப்படுகிறது
இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.…
இலங்கையர்கள் 2 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
மத்திய தூர ஓட்டப்பந்தய வீராங்கனை தருஷி கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி லேகம்கே ஆகியோர் உலக தடகள தரவரிசையின் அடிப்படையில் 2024 இல் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இதற்கான தகுதிக் காலம் ஜூன் 30…
ரியாத் மாகாண ஆளுநருடன், சவுதிக்கான இலங்கைத் தூதுவர் சந்திப்பு
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஸீஸ் அவர்களுடன் சிநேகபூர்வமான ஒரு சந்திப்பை மேற்கொண்டார். மேற்படி சந்திப்பின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், இவ்வாண்டு இலங்கை மற்றும்…
இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் கட்டணம்!
இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பஸ் கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாகும்.தேசிய பஸ் கட்டணக் கொள்கையின்படி பஸ் கட்டணங்கள் எவ்வாறு…
ஆசிரியர், அதிபர்கள் நாளை போராட்டம்!
தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரச துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்று…
LPL இன்று ஆரம்பம்!
5 ஆவது முறையாக இடம்பெறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (01) பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.முதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி இன்று…
ஜனாதிபதி நாளை விசேட உரை!
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். உடன்படிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிருடன் நாடு திரும்பிய மீனவர்!
Devon 5 மீன்பிடிக் கப்பலில் விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்த மீனவர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச…
3 மாத குழந்தை முஹம்மது ஷராப் இன் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவுவீர்களா?
எமது Muslimvoice.lk செய்தித்தளம் இந்த செய்தியை நேரில் சென்று ஆய்வு செய்து 100% உண்மை என உறுதி செய்த பின்னரே இந்த பதிவு பகிறப்படுகிறது. இலக்கம், 744/5/A, மபோல, வத்தயில் வசிக்கும் M.I.M சல்மான் என்பவரின் 3 மாத குழந்தையான M.S.…