இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்கவுள்ள அமெரிக்கா!
இலங்கையின் கரையோர பாதுகாப்பிற்காக விமானம் ஒன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.அமெரிக்க இராஜதந்திரி Doland Lu இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு ‘king air’ விமானமொன்று வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.குறித்த விமானம் இந்த வருடத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும்…
கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில்
கண்டி தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்காக பாடசாலையில் இருந்த மடிக்கணினியில் பாலியல் மற்றும் நிர்வாண காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை 12 வயது மாணவனிடம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 07ஆம்…
வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பயணித்த வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள்…
ரக்பி செம்பியன் பட்டத்தை வென்ற CR & FC அணி
அனைத்து கழகங்களுக்கிடையிலான ரக்பி லீக் சம்பியன்ஷிப்பில் 26 வருடங்களின் பின்னர் CR & FC அணி வெற்றிப்பெற்றுள்ளது.கண்டி அணியை 33க்கு 25 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து CR & FC அணி செம்பியன் பட்டத்தை வென்றது.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் நாளை (19) முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ…
சிறிலங்கா கிரிக்கெட்டின் விசேட அறிவித்தல்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கட் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக டிக்கெட் கரும பீடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம், பொது…
பாரத் – லங்கா வீட்டுத்திட்டம் நாளை ஆரம்பம்
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் நாளை (19)…
மேல் மாகாணத்தை சுற்றிவளைத்த பொலிஸார்!
இன்று (18) மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.இந்த தேடுதல் நடவடிக்கைக்காக 2,253 பொலிஸ் அதிகாரிகள், 1,112 இராணுவத்தினர் மற்றும் 219 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு…
கடலில் மூழ்கிய மாளிகைக்காடு, சாய்ந்தமருது மாணவர்களின் ஜனாஸா மீட்பு : ஒருமித்தே விடைபெற்ற நண்பர்கள்
மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர். அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15) எனும் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த…
இந்தியாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை
இந்தியாவின் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில்…