பெண்களுக்கு தொந்தரவு செய்தால் – 109 க்கு அழைக்கவும்!
இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள்…
இலங்கை மீதான தடை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி.) நீக்கியுள்ளதாக விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
500 கோடி ரூபா, மோசடி செய்த தம்பதியினர்
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினர் கண்டியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த கைது…
நெடுஞ்சாலை விபத்துக்களுக்கான காரணம்
சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கட்டுநாயக்காவிலிருந்து…
போதைப்பொருள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.வனாத்தவில்லுவ பிரதேசத்தில் போதைப்பொருள் அழிக்கும் வசதியுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அழுகிய மீன்கள்
சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.கப்பலை இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை பிரதிநிதிக்கு சொந்தமான…
பொலிஸார் போல் நடித்து முச்சக்கரவண்டி கொள்ளை!
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் சுமார் 930,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று (26) பிற்பகல் முறைப்பாடு கிடைத்துள்ளது.இந்த கொள்ளைச் சம்பவம்…
கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின
வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk…
சுதந்திர தின ஒத்திகையில் திடீர் மாற்றம்
ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கவிருந்த சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நடவடிக்கை ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் சுந்திர தின…
இலங்கையின் மீன்பிடி படகொன்று கடத்தல்
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் நெடுநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.அரபிக்கடலில் வைத்து குறித்த படகு மீனவர்களுடன் கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நெடுநாள்…